விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
ரஷ்யாவின் கிழக்கு தூர நகோட்கா விரிகுடா பகுதியில் சென்று கொண்டிருந்த சாலிவ் என்ற அமெரிக்கா எண்ணெய்க் கப்பலிலேயே நேற்று(சனிக்கிழமை) இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
வெடி விபத்து ஏற்பட்ட கப்பலில் தற்போது மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
உறைபனி நீரில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட குறித்த கப்பல் 2007ஆம் ஆண்டு தென் கொரியாவில் உள்ள ஹுண்டாய் கப்பல்கட்டும் தளத்தில் கட்டப்பட்டது.
எண்ணெய் கொண்டு செல்ல பயன்படும் இந்த கப்பல் அமெரிக்காவில் உள்ள டெசோரோ தூர கிழக்கு கடல் நிறுவனத்தால் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.