செயலாளராக காமினி செனரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
இதனையடுத்து அவரின் செயலாளராக காமினி செனரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இடைக்கால அரசாங்கத்தின் எவ்வித பதவியையும் பெற்றுக்கொள்ளாது இருக்க அவர் தீர்மானித்துள்ள நிலையில் அவரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த பதவியை பெற்றுக்கொள்ள காமினி செனரத் இணங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை நிர்வாக சேவை சங்கமும் காமினி செனரத்திடம் இந்த பதவியை ஏற்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதோடு, இந்த பதவிக்கு அவர் மிகவும் பொருத்தமானவர் என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனரென தெரிவிக்கப்படுகிறது.
நிர்வாக சேவையில் அதிக தகுதி பெற்ற செனரத், மஹிந்த ராஜபக்ஷ அரசின் ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானியாக பணியாற்றியவர் என்பதுடன், மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய மற்றும் நம்பகமான அதிகாரியென்பதும் குறிப்பிடத்தக்கது.