புதிய ஆண்டை வரவேற்க பிரமாண்ட பட்டாசு கொண்டாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பிரமாண்ட நிகழ்வினை வான்கூவர் புத்தாண்டு கொண்டாட்ட சங்கம், ஏற்பாடு செய்துள்ளது.
கொன்கோர்ட் பசுபிக் பிளேஸ் மற்றும் கிழக்கு போல்ஸ் கிரீக் இடையே கெம்பீ வீதி பாலம் மற்றும் சையன்ஸ் உலகம் என்ற பகுதியில், இந்த கொண்டாட்டம் இடம்பெறவுள்ளது.
வானை மிளிரச் செய்யும் பட்டாசு கொண்டாட்டம் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம். இதற்கமைய இம்முறை புதிய ஆண்டை வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பட்டாசு கொண்டாட்டம் வான்கூவரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்போது, பார்வையாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் அதேவேளை, இந்த உலக தரம் வாய்ந்த இந்த கொண்டாட்டம் மிக பிரமாண்டமாக இருக்குமென ஏற்பாடுக் குழு தெரிவித்துள்ளது.