டெங்குக் காய்ச்சல் அதிகரித்து வருவதால் அவதானமாக இருக்குமாறு சாகவச்சேரி சுகாதார மருத்துவ பிரிவினர் அறிவித்துள்ளனர்.
தென்மராட்சிப் பிரதேசத்தில் டெங்குக் காய்ச்சலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றதென அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தென்மராட்சிப் பிரதேசத்தில் 15 நாட்களில் 75 பேர் வரை டெங்குக் காய்ச்சலுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொடிகாமம் சாவகச்சேரி மட்டுவில் ஆகிய பிரதேசங்களில் டெங்கின் தாக்கம் அதிகளவில் காணப்படுவதால், மக்கள் தமது காணிகள் மற்றும் குடியிருப்புக்கள் போன்றவற்றில் டெங்கு நுளம்புகள் உருவாகக்கூடிய பகுதிகளை இனங்கண்டு அவற்றை துப்பரவு செய்யுமாறும் சுகாதார முறையில் பாதுகாத்துக்கொள்ளுமாறும் சாகவச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி அறிவித்துள்ளார்.
அத்துடன் மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் காணப்பட்டால் அருகில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெறுமாறு அறிவித்துள்ளனர்.
சாகவச்சேரி வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் 15 நாட்களுக்குள் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் விடுதிகளில் ஆயிரத்துக்கு மேற்பட்டோரும் சிகிச்சை பெற்றுவருகின்றமை புள்ளி விபரங்களின் மூலம் அறியப்பட்டுள்ளமை குறிபிடத்தக்கது