சென்று, வீடு திரும்பிய சிறுமி மீது பாலியல் பலாத்காரம் புரியப்பட்டுள்ளதாக முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை முறைபாட்டினை பதிவு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுஜன பெரமுனவின் பேரணியில் கலந்து கொள்வதற்காக தனது மகளும் தனது மனைவியும் சென்றிருந்தனர். ஆனால் அவர்கள் இருவரும் சம்பவத்தினத்தன்று இரவு 11 மணி வரை வீட்டிற்கு திரும்பவில்லை என்று சிறுமியின் தந்தை புகார் அளித்திருந்தார் என பொலிஸ் செய்தித் தொடர்பாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
மேலும் மனைவியும் மகளும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் சிறுமியின் தந்தை முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது பேரணியில் பங்கேற்ற இருவரும் பேருந்தில் திரும்பி வந்துகொண்டிருந்தப்போது, அதில் பயணித்த இளைஞன் ஒருவர், எல்பிட்டிய காட்டுப்பகுதி வரும்வேளை சிறுமியை பேருந்திலிருந்து இறக்கி அழைத்துச் சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
மேலும் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகநபர் குற்றத்தை ஒப்புகொண்டார். அதனடிப்படையில் ஹேம்மாதம பகுதியில் வசிக்கும் 23 வயது, இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தடயவியல் வைத்தியரிடம் சிறுமியை ஒப்படைத்து அறிக்கை பெற பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது