அத்தோடு, குறித்த நபர் ஐந்து பொலிஸ் கார்கள் உட்பட 10 வாகனங்களில் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவத்துடன் தொடர்புடையவராக கைது செய்யப்பட்டவர் 39 வயதான டேரில் லீ நோபல், அடையாளம் வெளியிடப்பட்டுள்ளார். இவர் நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் வாகனத்தின் ஆபத்தான செயற்பாடு, விபத்து நடந்த இடத்தில் நிறுத்தத் தவறியது, காப்பீடு இல்லாத மோட்டார் வாகனத்தை ஓட்டுதல், இடைநிறுத்தப்பட்ட உரிமத்துடன் வாகனம் ஓட்டுதல், மோட்டார் வாகனத்தின் திருட்டு என ஒன்பது குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
நோபல் குறித்த வாகனத்தை செலுத்தும் போது, போதையில் இருந்தாகவும் மேலும், இந்த விபத்துடன் அதிகமான வாகனங்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.