LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, November 10, 2019

கைவிடப்பட்ட அனைத்து அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் ஆரம்பிக்கப்படும் – மஹிந்த

நாட்டில் கடந்த 2015ஆம் ஆண்டுடன்
கைவிடப்பட்ட அனைத்து அபிவிருத்தி வேலைத் திட்டங்களும் எமது அரசாங்கத்தின் கீழ் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என எதிர்க் கட்சித் தலைவரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரித்து மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை  தேர்தல் பிரசாரக் கூட்டம் இடம்பெற்றது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த கூட்டத்திற்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், முன்னார் பிரதி அமைச்சர் பிரபாகணேசன், சிறி ரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா, வடக்கு கிழக்கு இணைந்த முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள், மன்னார் நகர சபை உறுப்பினர் டிலான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குறித்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டதோடு, வெளி மாவட்டங்களில் இருந்தும் பேருந்துகள் மூலம் ஆயிரக்கணக்கான மக்கள் அழைத்து வரப்பட்டனர்.

இதில் கலந்துகொண்டு மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றுகையில், “உங்களை சந்தித்து உரையாற்றுவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

கடந்த 30 வருட கால யுத்தத்தினால் பாதீக்கப்பட்டீர்கள். குறித்த யுத்தத்ததை நிறுத்தி அதிலிருந்து விடுதலை பெற்று நாட்டை அபிவிருத்தி செய்தோம்.

இந்த மாவட்டத்தில் வீதி அபிவிருத்திகள் மற்றும் ஏதேனும் அபிவிருத்திகள் இடம்பெற்றிருந்தால் குறித்த அபிவிருத்திகள் அனைத்தும் எனது ஆட்சியின் கீழ் இடம்பெற்றவையே.

நாங்கள் மக்களுக்காக பல வேலை வாய்ப்புக்களை பெற்றுக் கொடுத்தோம். ஆடைத் தொழிற்சாலை உட்பட பல தொழிற்சாலைகளை அமைத்துக் கொடுத்தோம். ஆனால் தற்போதைய காலத்தில் அவை எல்லாம் மூடப்பட்டுள்ளன.

நாங்கள் மக்களை ஏமாற்றுவது இல்லை. நாங்கள் மக்களுக்கு வழங்கிய உறுதி மொழிகளை நிறைவேற்றி உள்ளோம். ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் தற்போது தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு கருத்தையும் சிங்கள மக்களுக்கு சிங்கள மொழியில் வேறு ஒரு கருத்தையும் சர்வதேச அரங்கிற்கு வேறு ஒரு கருத்தையும் சொல்லி வருகின்றார்.

முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சொல்லுகின்றார் ஐக்கியம் என்றால் யுனைட்டட் என்று வராது. அது வேறு ஒரு விடயம் என்று கூறுகின்றார். மக்களை ஏமாற்றுகின்ற ஒரு விதமான வித்தை.

இங்கே பல பொய்யான வாக்குறுதிகள் வழங்கப்பட்டு வருகின்றது. 1500 ரூபாய் நாளாந்த சம்பளம் தருவதாக கூறுகின்றனர். ஆனால் குறித்த விடயம் அவர்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் இல்லை.

எமது வேட்பாளர் முக்கியமாக அபிவிருத்தி எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றது. விவசாயத்துறை, கல்வி, தேசிய நல்லிணக்கத்தை எவ்வாறு கட்டி எழுப்புவது, அச்சமின்றி சுதந்திரமாக எவ்வாறு வாழ்வது உள்ளிட்ட சூழ்நிலைகளை எவ்வாறு ஏற்படுத்துவது என்பது தொடர்பாக தெளிவாக தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முக்கியமாக எதிர்த் தரப்பு வேட்பாளர் கூறும் கதையை யாரும் இருந்து கேட்கக்கூடிய கதை இல்லை. நாட்டை பொறுப்பேற்கக் கூடிய ஒருவராய் எவ்வாறு பேசுவது என்று தெரியாதவருக்கா இந்த நாட்டை ஒப்படைக்கப் போகின்றார்கள் என்கின்ற சந்தேகம் எழுகின்றது.

நாங்கள் புத்தளம்-இளவன் குளம் ஊடாக மன்னாருக்கான வீதியை முன்னுரிமை அழித்து அபிவிருத்தி செய்து தருவோம். நாம் முதன்முறையாக 99 வீதமான மக்களுக்கு மின்சாரத்தை பெற்றுக் கொடுத்தோம். அத்தோடு குடி நீர் பிரச்சினை தொடர்பான ஆராய்ந்து வருகின்றோம். சுத்தமான குடிநீரை நாங்கள் வழங்குவோம் என்று கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

எந்த ஒரு அபிவிருத்தி பணிகளும் இடம்பெறாத ஒரு காலப் பகுதியாகத்தான் 2015ஆம் ஆண்டு முதல் இது வரை கருதப்படுகின்றது. நிறுத்தப்பட்ட அபிவிருத்திகளை மீண்டும் ஆரம்பிப்போம். மொட்டுச் சின்னத்திற்கு வெற்றி எனக் கூறி எனது உரையை முடித்துக் கொள்கின்றேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7