ஏற்பாட்டில் உணவு தன்னாதிக்கத்தை பாதுகாப்பது தொடர்பாக இளைஞர்களுக்கு தெளிவுபடுத்தும் விழிப்புணர்வு செயலமர்வு மன்னாரில் இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த செயலமர்வு இடம்பெற்றது.
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின், மன்னார் மாவட்ட இணைப்பாளர் ஏ.பெனடிற் குரூஸ் தலைமையில் இடம்பெற்ற குறித்த விழிர்ப்புணர்வு செயலமர்வில், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் செயற்பாட்டாளர் மேரி பிரியங்கா கலந்து கொண்டதோடு, உணவு தன்னாதிக்கத்தை பாதுகாப்பது தொடர்பாக விரிவுரைகளை விவசாய வளவாளர் பிரின்டன் ஜோட் நிகழ்த்தினார்.
மேலும் நச்சுத் தண்மையினை தவிர்க்கும் வகையில் உணவு தன்னாதிக்கத்தை பாதுகாப்பது தொடர்பாகவும் நச்சுத் தன்மை இன்றி இயற்கையான முறையில் விவசாயம் மற்றும் தோட்டச் செய்கைகளை கையாளும் முறை தொடர்பாகவும் நோய் ஏற்படும் சந்தர்ப்பத்தை தவிர்த்துக் கொள்ளும் வழி முறைகள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
குறித்த விழிர்ப்புணர்வு செயலமர்வில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அனுசரனையுடன் இயங்கும் இளைஞர் அணியினர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.