எண்ணெய் குறித்து தீவிர ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், இந்த விவகாரத்தில் முக்கிய திருப்பமாக, சம்பவத்துக்கு காரணமாக ஒரு கப்பலை அடையாளம் கண்டுள்ளதாக பிரேஸில் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த கப்பல்தான் எண்ணெயை சிந்தியிருக்கலாம் என நம்புவதாகவும் பிரேஸில் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
முன்பு, கப்பல்கள் செல்லும் கடற்பாதைகள் குறித்து பல நிபுணர்களிடம் கேட்டு வருவதாகவும், சிந்திய எண்ணெய் குறித்து கண்டறிய எந்த நாட்டில் என்ன வகையான மசகு எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறித்தும் விசாரித்து வருவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
செப்டம்பர் மாத ஆரம்பத்தில் பிரேசிஸின் கடற்பரப்புகளிலும், வட கிழக்கு பிரேஸிலின் சதுப்பு நிலக் காடுகளிலும் மசகு எண்ணெய் சிந்தியது.
பிரேஸிலில் உள்ள 9 மாநிலங்கள், தங்கள் கடற்பரப்புகளில் சிந்திய அடர்த்தியான மசகு எண்ணெய்யை சுத்தம் செய்து வருகின்றன. இதுவரை 1000 டன்னுக்கும் அதிகமான எண்ணெய் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சிந்திய எண்ணெய் குறித்து பல சந்தேகங்களும், ஊகங்களும் எழுந்த வண்ணம் உள்ளன.
இம்மாதிரியாக சமிக்ஞை நிறுத்தப்படுவதால் ஏதேனும் கப்பல் விபத்துக்குள்ளாகி அது தெரியப்படுத்தாமலும் போயிருக்கலாம் அல்லது ஏதேனும் மூழ்கிய கப்பலில் இருந்தும் இந்த எண்ணெய் சிந்தியிருக்கலாம் மூன்றாவது, இது ஒரு கப்பலைவிட்டு மற்றொரு கப்பலுக்கு மாற்றும்போது நடந்திருக்கலாம் என பல ஊகங்கள் எழுந்துள்ளன.
வெனிசுவேலாவின் மசகு எண்ணெயின் ஒரு பகுதி ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால் பெரும்பாலும் ஆசியாவுக்கு அனுப்பப்படுகிறது. அந்த பாதை தற்போது பிரேஸிலில் எண்ணெய் சிந்திய கடற் பகுதியை ஒட்டியதுதான்.
ஆனால், வெனிசுவேலாவோ அது தங்கள் நாட்டின் மசகு எண்ணெய் இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும், தங்களின் வாடிக்கையாளர்களிடமிருந்து எண்ணெய் கொட்டிவிட்டதாக எந்த ஒரு புகாரும் வரவில்லை என வெனிசுவேலா கூறியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு தங்களின் அண்டை நாடுகளை குற்றம் சொல்ல விரும்பவில்லை என பிரேஸில் தெரிவித்துவிட்டது.
சிந்திய மசகு எண்ணெயின் மாதிரியை சோதனை செய்ய அமெரிக்காவில் உள்ள ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் முடிவுகள் சீக்கிரம் வெளியிடப்படும். மேலும் நோர்வே மற்றும் ஃபிரான்ஸ் போன்ற நாடுகளிலும் சோதனை செய்யப்படவுள்ளதாகவும் பிரேஸில் தெரிவித்துள்ளது