வேட்பாளர் சஜித் பிரேமதாச யாழ்ப்பாணம், நல்லூரில் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.
இந்த கூட்டம் நல்லூர்- சங்கிலியன் பூங்கா வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை ஆரம்பமாகியது.
இதில் அமைச்சர்களான சரத் பொன்சேகா, விஜயகலா மகேஸ்வரன், ரிஷாட் பதியுதீன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
இதேவேளை, இன்று சஜித் பிரேமதாச உள்ளிட்ட குழுவினர், மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களுக்கும் விஜயம் மேற்கொண்டு தேர்தல் பிரசார நடவடிக்கையை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.