இருக்கிறது என்றும் ரஜினி-கமல் இணைந்தாலும் தங்களுக்கு கவலை இல்லை என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
சென்னையில் இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவித்த அவர், “மேயர் பதவி தேர்தல் மறைமுகமாக நடத்தப்படுவது குறித்து எந்த திட்டமும் இல்லை. அப்படி ஏதாவது இருந்தால் ஊடகங்களுக்கு முதலில் தெரியப்படுத்துவோம்.
ரஜினி-கமல் ஒன்றாக சேரட்டும். அ.தி.மு.க. என்பது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட தொண்டர்களின் மிகப்பெரிய கோட்டை.
அ.தி.மு.க.வின் அடித்தளம் மிகவும் வலுவாக இருக்கிறது. யார் இணைந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் இல்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.
தமிழக மக்களின் நலனுக்காக தேவையேற்பட்டால் இருவரும் அரசியல் ரீதியாக இணைந்து செயற்பட தயார் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பரம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.