எந்தக் கட்சியாக இருந்தாலும் தவிர்க்க வேண்டும் என, தே.மு.தி.க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தே.மு.தி.க மாவட்டக் கழகச் செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) சென்னை, கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த தீர்மானத்தின்படி , பொதுமறை தந்த திருவள்ளுவர் அனைவருக்கும் பொதுவானவர். அவரை வைத்து அரசியல் செய்வதை எந்தக் கட்சியாக இருந்தாலும் தவிர்க்க வேண்டும்.
இது தேவையில்லாத பல மோதல்களையும், சட்டம் ஒழுங்கு பிரச்சினையையும் ஏற்படுத்தக் காரணமாக அமைந்துவிடும். அதனால் தமிழக அரசு உடனடியாக இந்தப் பிரச்சினையில் கவனம் செலுத்தி, இதுபோன்ற நிகழ்வுகள் மேலும் தொடராத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.