குண்டுத்தாக்குதலில் ஒன்பது பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் பல்வேறு பகுதிகளிலும் தலிபான்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
அத்துடன், பொது மக்கள் மீதும் இராணுவம் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இராணுவமும் அவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் தகார் மாகாணத்திலுள்ள தர்காட் மாவட்டத்தில் நேற்று(சனிக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலில் ஒன்பது பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு எந்தவொரு தீவிரவாத அமைப்பும் இதுவரையில் பொறுப்பேற்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.