மாவட்டத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது.
நேபாளம் நாட்டின் டோலாக்ஹா மாவட்டத்தில் உள்ள மகா டியூராலி என்ற இடத்தில் இருந்து காத்மாண்டு நகரை நோக்கி பயணித்த பேருந்தொன்றே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து குறித்த பேருந்து விபத்துக்குள்ளாகியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த விபத்தில் உயிரிழந்த 8பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போனவர்களை மீட்கும் பணி இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இந்த விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.