இடம்பெற்ற கார் குண்டுத் தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
துருக்கி பாதுகாப்பு அமைச்சகத்தின் ருவிற்றர் பதிவில் இது தெரிவிக்கப்பட்டடுள்ளது.
ரக்க மாகாணத்தின் வடக்கே உள்ள சுலுக் எனும் கிராமத்திலேயே இந்த வெடிப்புச் சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளதுடன் குறித்த தாக்குதலுக்கு குர்திஷ் அமைப்பினர் காரணம் எனவும் துருக்கிய பாதுகாப்பு அமைச்சகம் சுட்டிக்கட்டியுள்ளது.
சிரியா – துருக்கி எல்லையில் கடந்தவாரம் இடம்பெற்ற கார் குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர் இச்சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது 14 பேர் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.