LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, November 21, 2019

இலங்கையை உலுக்கிய ஈஸ்ரர் தாக்குதல் – ஆறாத ரணங்களுடன் இன்றுடன் 7 மாதங்கள்!

இலங்கையை உலுக்கிய ஈஸ்ரர் தாக்குதல்கள்
இடம்பெற்று இன்றுடன் 7 மாதங்கள் நிறைவடைந்து விட்டன. ஆனாலும் மக்கள் மனதின் ரணங்கள் இன்றும் ஆறவில்லை.

பாதிப்புகளை காதால் கேட்டவர்களுக்கு அது ஒரு செய்தியே. ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அது ஆறாத வடுவாகவே உள்ளது.

தாக்குதல்களில் அவயங்களை இழந்து, உறவுகளை இழந்து தவிக்கும் ஏராளமானோர் இன்றும் துன்பத்துடன் வாழ்கின்றனர்.

இழப்பீடுகள் வழங்கப்பட்ட போதிலும் நிலையானதொரு வாழ்க்கை வாழ முடியாது எத்துனையோ மக்கள் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் வாழ்வதை நாம் கண்கூடாக காண்கின்றோம்.

அன்றைய நாளினை நினைத்துப்பார்த்தால் இன்றும் அதன் அதிர்வுகள் எம் கண்முன்னே காட்சிகளாக உருவெடுக்கின்றன.


ஆம்! ஏப்ரல் 21 தாக்குதல், எதிர்பாராத நேரத்தில் இடம்பெற்றதும், இலங்கை மக்களை அச்சத்தின் உச்சிக்கே கொண்டுசென்ற கோர சம்பவமாகவும் இடம்பெற்றிருந்தது,

ஈஸ்ரர் தினத்தன்று புத்தாடைகளை அணிந்து தேவாலயங்களுக்கு சென்ற மக்கள், இலங்கையின் இயற்கை அழகில் இலயித்திருக்கலாமென்ற ஆவலில் இலங்கைக்கு வந்த வெளிநாட்டவர்களின் அழகிய காலை நேரம், பிரபல நட்சத்திர விடுதியில் காலை உணவை உட்கொள்ளச் சென்ற குடும்பங்களின் அவா என அனைத்தும் ஒரு நொடிப்பொழுதில் சிதறிப் போயின.

சுமார் 8.45 மணி முதல் 9 மணி வரையிலான குறிப்பிட்ட நேரத்திற்குள் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய செபஸ்டியன் தேவாலயம், மட்டக்களப்பு சீயோன் ஆகிய தேவாலங்களிலும் கொழும்பு கிங்ஸ்பரி, சினமன் கிரான்ட் மற்றும் சங்ரி-லா ஆகிய 3 நட்சத்திர விடுதிகள் மீதும் பயங்கரவாத தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த தாக்குதல்களில் குழந்தைகள், பெரியவர்கள், சிறுவர்கள், வயோதிபர்கள் என 250இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அத்தோடு 500 பேர் வரையில் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களில் பலர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ள அதேவேளை, அவயங்களை இழந்தவர்கள் இன்று கதியற்ற நிலையில் வாழ்கின்றனர்.

இந்த தாக்குதல்களின் பின்னர் தாக்குதல்களுக்கு காரணமானவர்கள் இனங்காணப்பட்டனர். தாக்குதல்கள் குறித்து ஆராய குழுக்கள் நியமிக்கப்பட்டன. விடுதிகள் மற்றும் தேவாலயங்கள் புனரமைப்புச் செய்யப்பட்டன.

தற்போது விடுதிகள் வழமைக்குத் திரும்பியுள்ளன. தேவாலயங்களில் ஆராதனைகள் சிறப்பாக இடம்பெறுகின்றன.

ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை மட்டுமே கேள்விக்குறியாகியுள்ளது. குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் 7 மாதங்கள் கடந்துவிட்டன.

இலங்கை  வழமைக்குத் திரும்பியுள்ள போதிலும் பாதிப்படைந்த மக்கள் வலிகளின் ரணத்திலிருந்து இன்னும் மீளவில்லை. அதற்கு மருந்துதான் ஏது?

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7