செயற்பாட்டுக்குக் கொண்டு வருவதாக சீனா அறிவித்துள்ளது.
6G தொழில்நுட்பம் குறித்த ஆய்வு மற்றும் வளர்ச்சிப் பணிகளைத் தொடங்க சீனாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் 6G சேவைக்கான மற்றும் இதன் முக்கியத் துறைகள் இணைந்து கலந்து ஆலோசித்துள்ளனர்.
இதுதொடர்பான செய்திகளை சீன ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.
அல்ட்ரா வேக இணைய சேவையை முதலில் செயற்படுத்திக் காட்டுவதில் அமெரிக்கா மற்றும் சீனா இடையே ஒரு மறைமுகப் போர் நடந்து வருகிறது.
இந்நிலையில் 4G தொழில்நுட்பத்தைவிட 20 மடங்கு வேகமான 5G தொழில்நுட்பத்தை செயற்படுத்த உலக நாடுகள் பணியாற்றி வருகின்றன. self-driving கார்கள், augmented ரியாலிட்டி ஆகிய தொழில்நுட்பங்களுக்கு செயல்வடிவு கொடுக்க 5G தொழில்நுட்பம் பெரிதும் உதவும் என கூறப்படுகிறது.
இதேவேளை, கடந்த ஏப்ரல் மாதம் முதன்முதலாக 5G தொழில்நுட்பத்தை செயற்படுத்திக் காட்டியதாக சீனாவையும் அமெரிக்காவையும் மிரட்டியது தென்கொரியா.
எனவே இம்முறை 6G தொழில்நுட்பத்தில் சீனா முன்னனியில் இருக்க வேண்டும் என அந்நாடு அல்ட்ரா வேகத்தில் செயற்பட்டுவருகிறது.