லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் தளபதி 64 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த திரைப்படத்தில் பிரபல தொகுப்பாளினி ரம்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரம்யா, தற்போது தளபதி 64 படப்பிடிப்பிற்காக டெல்லியில் இருப்பதாகவும் விஜய்யின் ரசிகையாக அவரை தூரத்தில் நின்று பார்த்து ரசித்து கொண்டிருந்த தனக்கு, தற்போது விஜயுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் தன்னுடைய வாழ்க்கை முழுமை அடைந்து விட்டதாக தாம் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தளபதி 64 திரைப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மேனன் மற்றுமொரு முக்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா, மேலும் சில முக்கிய கேரக்டர்களில் சாந்தனு, அந்தோணி வர்கீஸ் உள்பட பலர் ஆகியோர் இந்த படத்தில் நடித்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தில் மேலும் ஒரு இளம் நடிகை இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.