மாநிலங்களில் புதர்த் தீ வேகமாகப் பரவி வருகின்றது.
சிட்னிக்கு வட மேற்கேயுள்ள சுமார் இரண்டாயிரம் வீடுகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
அந்த பிராந்தியங்களை புகை மூட்டம் சூழ்ந்துள்ளது. நியூ சவுத் வேல்ஸின் சில இடங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூ சவுத் வேல்ஸின் 52 இடங்களில் தொடர்ந்தும் புதர்த் தீ பற்றியெரிவதாக மீட்புப் படைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
குவின்ஸ்லாந்து மாநிலத்திலும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
600-க்கும் அதிகமான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. புதர்த் தீ காரணமாக சுமார் ஆறு மில்லியன் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.