பிரிவிலுள்ள 42 கிராமங்களில் நேற்றுமுதல் மின்தடை ஏற்பட்டுள்ளது.
வவுனியா மின்சார சபை ஊழியர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளமையால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் வவுனியா ஆச்சிபுரம், சமளங்குளம், சிதம்பரபுரம், சாளம்பைக்குளம், பட்டானிச்சூர் போன்ற பல கிரமங்களைச் சேர்ந்த மக்கள் தமது கிராமங்களில் மீண்டும் மின்சார இணைப்பை ஏற்படுத்தித் தருமாறு கோரி வவுனியா மின்சாரசபைக்கு முன் கூடியிருந்தனர்.
மின்சார சபையின் வாயிலில் கடமையில் இருந்த பொலிஸாரும், வாயிற் காவலரும் மக்களை மின்சார சபைக்குள் அனுமதிக்கவில்லை.
இந்த சூழலில், மக்கள் தமக்கு மின்சார இணைப்பு வழங்கவேண்டும் என வவுனியா பொலிஸாரிடம் முறைப்பாடு செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் நேற்று மாலை மின்சாரசபை ஊழியர்கள் மீது அப்பகுதியிலுள்ள குழுவினர் மேற்கொண்ட தாக்குதலில் ஆறுபேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.