LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, November 9, 2019

3ஆயிரத்திற்கும் அதிகமான தேர்தல் வன்முறைகள் பதிவு – தேர்தல்கள் ஆணைக்குழு

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான சட்டமீறல்கள்
தொடர்பாக இதுவரை 3ஆயிரத்திற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அதிகளவிலான முறைப்பாடுகள் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ பிரிவிற்கே கிடைக்கப் பெற்றுள்ளதுடன், அவற்றில் அதிகமான முறைப்பாடுகள் தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பாகவே பதிவாகியுள்ளன.

கடந்த வியாழக்கிழமை பிற்பகல் 4 மணியிலிருந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணிவரையான 24 மணித்தியாலங்களுக்குள் தேர்தல் வன்முறைகள் தொடர்பாக 105 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

அந்தவகையில் மாவட்ட தேர்தல் முகாமைத்துவ நிலையத்திற்கு 86 முறைப்பாடுகளும், தேசிய தேர்தல்கள் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு 19 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்போது சட்ட மீறல்கள் குறித்து 102 முறைப்பாடுகளும் தேர்தல் தொடர்பான ஏனைய சட்ட மீறல்கள் தொடர்பாக 3 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.

அத்துடன், கடந்த மாதம் 8ஆம் திகதியிலிருந்து வெள்ளிக்கிழமை மாலை 4 மணிவரையில் 3319 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. மாவட்ட தேர்தல் முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு 2336 முறைப்பாடுகளும், தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு 983 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன.

தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பாக 3189 முறைப்பாடுகளும், தேர்தல் தொடர்பான ஏனைய குற்றச்செயல்கள் குறித்து 105 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன. இந்நிலையில் தேர்தல் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 25 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

தேர்தல் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்திலேயே அதிகளவான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7