தொடர்பான சாட்சிய பதிவுகளை மேற்கொள்வதற்காக வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
குறித்த வழக்கு இன்று (புதன்கிழமை) கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தபோதே மேலதிக விசாரணைகளை நவம்பர் 22 ஆம் திகதி முன்னெடுக்கவுள்ளதாக நீதவான் அறிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் பொலிஸ் ஆய்வாளர் நியோமல் ரங்கஜீவ, முன்னாள் சிறைச்சாலை கண்காணிப்பாளர் எமில் ரஞ்சன் மற்றும் சிறை புலனாய்வு அதிகாரி இந்திக சம்பத் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைக் கலவரத்தில் 27 கைதிகள் கொல்லப்பட்டதுடன் 40 பேர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.