மக்கள் 100 சதவீதம் அதிசயத்தையும் அற்புதத்தையும் நிகழ்த்துவார்கள் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்து்ளளார்.
கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்த் இன்று (வியாழக்கிழமை) சென்னைக்கு திரும்பினார். இதன்போது செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது, தான் வாங்கிய சிறப்பு விருதுக்கு தமிழ் மக்களே காரணம் எனவும் இந்த விருதை அவர்களுக்கு சமர்ப்பிப்பதாகவும் ரஜினி தெரிவித்தார்.
மேலும், கமலுடன் கூட்டணி அமைத்தால் யாருக்கு அதிகாரம் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், 2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் தமிழக மக்கள் மிகப்பெரிய அதிசயத்தையும், அற்புதத்தையும் நிகழ்த்திக் காட்டுவார்கள் எனவும் கூறினார்.