ரஜினிகாந்த் சொன்ன அதிசயம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் தமிழக மக்கள் மிகப்பெரிய அதிசயத்தையும், அற்புதத்தையும் நிகழ்த்திக் காட்டுவார்கள் என இன்று (வியாழக்கிழமை) ரஜினிகாந்த ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி விமான நிலையத்தில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழக மக்கள் மிகப்பெரிய அதிசயத்தையும், அற்புதத்தையும் நிகழ்த்திக் காட்டுவார்கள் என்று ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்.
எந்த அடிப்படையில் அதிசயம் நிகழும் என ரஜினி கூறுகிறார் எனத் தெரியவில்லை. 2021இல் அ.தி.மு.க. அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என ரஜினி கூறியிருக்கலாம்.
2021இலும் அ.தி.மு.க. ஆட்சி என்பதையே அதிசயம் என்கிறார். ரஜினி கட்சி தொடங்கிய பிறகே அவரைப் பற்றியும், அவரது கருத்தை பற்றியும் விரிவாகக் கூறமுடியும்” என்று கூறினார்.