நகரில் நீண்ட நாட்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த 14 வயதான எலெக் இங்கிரமிற்கு (Alec Ingram) என்பவரின் இறுதி ஆசை விநோதமான முறையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தன்னுடைய இறுதி ஊர்வலத்தில் பந்தயக் கார்கள் ஊர்வலம் வர வேண்டும் என்பதே அவருடைய இறுதி ஆசையாக இருந்தது.
குறித்த இளைஞரின் இறுதி ஆசையை நிறைவேற்றுவதற்காக அமெரிக்காவின் பல மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
2015 இல் osteosarcoma எனும் அரிய வகைப் புற்றுநோயால் சிறுவனாக இருந்த இங்கிரம்மின் எலும்புகள் பாதிக்கப்பட்டிருந்தன.
கடந்த நான்கு ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடி வந்த அவர் கடந்த வாரம் சிகிச்சைகள் பலனளிக்காமல் உயிரிழந்தார்.
அவருடைய இறுதி ஆசையை நிறைவேற்ற ‘Sports Cars for Alec’ என்ற இறுதி ஊர்வல அணிவகுப்புக்கு Soldiers Always எனும் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. அணிவகுப்பில் சுமார் 2,100 பந்தயக் கார்களும் 70 மோட்டார் சைக்கிள்களும் பங்கேற்றமை இங்கு சிறப்பம்சமாகும்.
பந்தய வாகனங்கள் செயிண்ட் லூயிஸ் நகரிலிருந்து, சுமார் 1300 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள வொஷிங்டன் நகரம் வரை தமது இறுதி ஊர்வல பயணத்தை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.