உள்ளிட்ட 20 சதவீத இடங்களைக் கேட்க தே.மு.தி.க முடிவு செய்துள்ளது.
சமீபத்தில் இடம்பெற்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க, தே.மு.கவின் கூட்டணி வெற்றிபெற்றுள்ள நிலையில் மேற்படி திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இது குறித்து தே.மு.தி.க மாவட்ட செயலாளர்கள் சிலர் கூறுகையில், கடந்த மக்களவைத் தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்கீடு செய்வதில் கடைசி வரையில் குழப்பம் நீடித்தது.
சில கட்சிகளுக்கு முன்கூட்டியே தொகுதிகளை ஒதுக்கீடு செய்து விடுவதால், அடுத்தடுத்து வரும் கட்சிகளுக்கு எஞ்சியுள்ள இடங்களை ஒதுக்கீடு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.
எனவே, கூட்டணி கட்சிகளுக்குள் எந்தவித குழப்பமும் இன்றி இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதற்கு அ.தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் ஒரே நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி, இடங்களை ஒதுக்க வேண்டுமென நாங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளோம் எனத் தெரிவித்தனர்.