விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிலிப்பைன்ஸின் வடக்கு பகுதியில் பாரவூர்தி ஒன்று பள்ளத்தில் வீழ்ந்தமையினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தின் போது பாரவூர்தியில் 40 பேர் வரை பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.