மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினோ பசோவில் நேற்று (புதன்கிழமை) இரவு நடந்த துப்பாக்கிச் சண்டையில் 18 ஜிகாதி தீவிரவாதிகள் உயிரிழந்ததாக அந்நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தப்பாக்கிச் சூட்டுக்க பதிலடி கொடுக்கும் முகமாக பாதுகாப்புத் தரப்பினர் மேற்கொண்ட தாக்குதலிலேயே இவர்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது, தமது தரப்பில் ஒரு பொலிஸ் அதிகாரி உயிரிழந்ததோடு ஏழு அதிகாரிகள் காயமடைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன் ஜிகாதிகளுக்குச் சொந்தமான ஆயுதங்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஜி.பி.எஸ். உபகரணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புர்கினோ பசோவின் அண்டை நாடான சாஹேலில் இராணுவம் மேற்கொண்ட இரண்டு நடவடிக்கைகளில் கடந்த வாரம் 32 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். இதையடுத்து இச்சம்பவம் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது