பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘தலைவர் 168’ திரைப்படம் உருவாகிவருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பரில் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது நடிகர் சூரி இணைந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ரஜினி படத்தில் சூரி முதல்முறையாக நடிக்கவுள்ளார்.
இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக கடந்த 90களில் அவருக்கு ஜோடியாக நடித்த பிரபல நடிகை ஒருவர் நடிக்கவிருப்பதாகவும், ரஜினியின் மகளாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளார். ரஜினி படத்திற்கு இமான் இசையமைப்பதும் இதுவே முதல்முறையாகும்.