இராணுவத்தினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக நீதிகோரி இலங்கையில் உறவுகளினால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் எதிர்வரும் 16 ஆம் திகதி 1000வது தினத்தை எட்டுகின்றது.
1000 நாட்களாக இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக தொடரும் இப்போராட்டத்திற்கு வலுச்சேர்ப்பதற்காக எதிர்வரும் 16 ஆம் திகதி மதியம் 12.30 முதல் 15.30 வரை, 10 Downing Street, London, SW1A2AA இல் கவனயீர்ப்பு போராட்டமொன்று நடைபெறவுள்ளது.
இதற்கான பிரசார பணிகள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் பிரித்தானியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழர்கள் வாழும் பல பகுதிகளில் நடைபெற்றது.
முக்கியமாக தமிழர் கடைகள், தமிழ் மக்கள் கூடும் இடங்களை மையப்படுத்தி இப்பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
நாடு கடந்த தமிழீழ செயற்பாட்டாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், புத்திஜீவிகள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு, நாடளாவிய ரீதியில் ஒரே நாளில் தமிழ் மக்கள் செரிந்து வாழும் அனைத்து இடங்களிலும் பிரச்சாரம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.