ஏற்பட்டு வாயு கசிவு மற்றும் வெடிப்பு சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்தனர். அத்துடன் மேலும் 9 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தார்.
சாங்ஷி மாகாணத்தில் உள்ள பியாங்கோ கவுண்டியில் இயங்கி வரும் நிலக்கரி சுரங்கம் ஒன்றிலேயே இந்த அசம்பாவிதம் நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த சுரங்கத்தில் 35 தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்த போது, திடீரென நிலக்கரி சுரங்க வாயுகட்டமைப்பு கசிவு ஏற்பட்டு வெடிவிபத்து இடம்பெற்றது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்புப்படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
வெடி விபத்திலிருந்து 11 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இது தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.