நாடுமுழுவதும் வெளியான தேர்தல் முடிவின் படி, பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ 6,924,255 வாக்குகளை (52.25%) பெற்றுள்ளார்.
இதேவேளை புதிய ஜனநாயக முன்னணியின் சார்பாக போட்டியிட்ட சஜித் பிரேமதாச, 5,564,239 (41.99%) வாக்குகளை பெற்றுள்ளார்.
இதேவேளை தேசிய மக்கள் சக்தியின்சார்பாக போட்டியிட்ட அநுரகுமார திசாநாயக்க 418,553 (3.16%) வாக்குகளையும் முன்னாள் இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்க 49655 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
அத்தோடு எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, 38,814 வாக்குகளையும் சிவாஜிலிங்கம் 12,256 வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.