செய்ய வந்த 12 வயது தமிழக சிறுமியை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை, தந்தையுடன் சபரிமலைக்கு வருகை தந்திருந்த 12 வயது சிறுமியையே பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இளம் பெண்கள் நுழைந்து, பிரச்சினை ஏற்படுவதை தடுக்க கேரள பொலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்காக பம்பை மற்றும் நிலக்கல் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார், பெண் பக்தர்களின் வயது சான்றை சரிபார்த்த பிறகே கோயிலுக்கு செல்ல அனுமதிக்கிறார்கள்.
மேலும் 10 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்ட இளம் பெண்களை, அவர்கள் அறிவுரை கூறி திருப்பி அனுப்பி வருகிறார்கள்.
கடந்த 16ஆம் திகதி நடை திறந்த அன்று ஆந்திராவைச் சேர்ந்த 10 பெண்கள் சபரிமலைக்கு வந்தனர். அவர்களை பொலிஸார் பம்பையில் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பினர்.
இதேபோன்று நேற்று காலை, நிலக்கல்லில் 2 ஆந்திர இளம் பெண்களை பொலிஸார் தடுத்து திருப்பி அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் இன்று காலை தமிழகத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி தனது தந்தையுடன் குழுவாக சபரிமலைக்கு வந்துள்ளார்.
இதன்போது அவரது வயது சான்றை சரிபார்த்த பொலிஸார் 12 வயது ஆவதை கண்டுப்பிடித்தனர். அதனைத் தொடர்ந்து சிறுமியை சபரிமலை தரிசனத்துக்கு அனுமதிக்கவில்லை.
இதனால் சிறுமியின் தந்தை மாத்திரம் தரிசனத்தில் ஈடுபட்டதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.