அருகே கச்சேகுடா ரயில் நிலையத்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் 10 பேர் காயமடைந்தனர்.
சமிக்ஞை கோளாறால் இரு ரயில்களும் ஒரே தடத்தில் வந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு ரயில்களும் குறைந்த வேகத்தில் வந்ததால், பெரிய அளவு சேதங்கள் தவிர்க்கப்பட்டன.
குர்னூல் நகரில் இருந்து ஹூன்ட்ரி இன்றர்சிற்றி எக்ஸ்பிரஸ் ரயிலும், புறநகர் ரயிலும் இன்று (திங்கட்கிழமை) கச்சேகுடா ரயில் நிலையத்துக்கு வந்தன. அப்போது எதிர்பாராதவிதமாக இரு ரயில்கள் செல்லவும் ஒரே வழித்தடத்தில் சமிக்ஞை கிடைத்த நிலையில் விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் காயமடைந்த 10 பேர் மீட்கப்பட்டு ஓஸ்மானியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணை இடம்பெற்று வருகின்றன.