LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, November 6, 2019

செறிவூட்டப்பட்ட யுரேனியம் உற்பத்தியை​ 10 மடங்காக அதிகரித்தது ஈரான்!

பாரிய அணு ஆயுதங்கள் தயாரிக்கப்
பயன்படுத்தப்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் உற்பத்தியை பத்து மடங்காக அதிகரித்துள்ளதாக ஈரான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் பெரக் ஒபாமா ஜனாதிபதியாக ஆட்சி நடத்தியபோது, கடந்த 2015 ஆம் ஆண்டு அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ரஷியா, இங்கிலாந்து, ஜேர்மன் ஆகிய நாடுகளுடன் வரலாற்று சிறப்பு மிக்க அணுவாயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை ஈரான் ஏற்படுத்தியது.

அதன் பின்னர் 2 வருடங்கள் கடந்த பின்னர் அந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. குறித்த ஒப்பந்தம், ஈரான் அணு ஆயுத தயாரிப்பை கட்டுக்குள் வைக்கவும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அந்த நாட்டின் மீது விதித்த பொருளாதார தடைகளை படிப்படியாக விலக்கி கொள்ளவும் வழி வகுத்தது.

ஆனால் இந்த விடயம் அமெரிக்க நலனுக்கு எதிரானது என கூறி இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக கடந்த ஆண்டு முன்னாள் ஜனாதிபதி பெரக் ஒபாமா அறிவித்தார். அத்துடன் ஈரான் மீது பொருளாதார தடைகளை விதித்தார். இதனால் ஈரானின் பொருளாதாரம் சீர்குலைந்தமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் நடவடிக்கையில் கடும் அதிருப்தி அடைந்த ஈரான், இது தொடர்பாக பேச்சு நடத்தப்போவதில்லை என்று தெரிவித்தது.

அணு ஆயுதங்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை அதிகரிப்பதற்கு ஈரான் நடவடிக்கை எடுக்கப்போவதாக தகவல்கள் வெளிவந்தன.

இந்த ஒப்பந்தத்தில் மீதமுள்ள கூட்டு நாடுகளான பிரித்தானியா, சீனா, பிரான்ஸ், ஜேர்மன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள், ஈரான் மீதான அமெரிக்க பொருளாதாரத் தடைகளைத் தவிர்க்க உதவத் தவறினால் மேலும் அணு ஆயுத உற்பத்தியை அதிகரிக்கப் போவதாக அச்சுறுத்தியது.

கடந்த செப்டம்பர் 7 ஆம் திகதி இந்த விவகாரத்தில் சுமூகமான தீர்மானத்தை எடுக்குமாறு ஐரோப்பிய நாடுகளுக்கு அறிவுறுத்திய 60 நாள் காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது.

இந்தநிலையில் செறிவூட்டப்பட்ட யுரேனியம் உற்பத்தியை முன்னர் இருந்ததை விட பத்து மடங்காக அதிகரித்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஈரானின் அணுசக்தி அமைப்பின் தலைவர் சலேஹி கூறுகையில், “கடந்த செப்டம்பர் 7 ஆம் திகதி செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்புக்களை அதிகரிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்தது.

ஒரு நாளைக்கு 5 கிலோ அளவில் யுரேனியம் தயாரிக்கப்படுகின்றது. இரு மாதங்களுக்கு முன்பு இது நாளொன்றுக்கு 450 கிராம் அளவில் இருந்தது.

ஈரானிய பொறியாளர்கள் ஐ.ஆர் -9 இன் முன்மாதிரி ஒன்றை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர். இது எங்கள் புதிய இயந்திரமாகும். மேலும் ஐ.ஆர்-எஸ் என்ற புதிய இயந்திரத்தின் மாதிரியும் உருவாக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் இரண்டு மாதங்களில் நடந்தேறியுள்ளன. இது செறிவூட்டப்பட்ட யுரேனியம் உற்பத்தியில் அதிவேக வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.

அணுசக்தி துறையில், ஈரான் நாட்டின் வலிமையைக் காட்ட இந்த வாய்ப்பை தந்ததற்கு எதிரிக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7