அத்துடன் எமது வளத்தை நாமே பாதுகாக்கும் வகையில், வெளிநாடுகளில் இருந்த சில விவசாய பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படமாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பண்டாரவளை நகரில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தெரிவிக்கையில், நாட்டில் பயிரிடப்படும் கிழங்கு மற்றும் மிளகு ஆகியவற்றை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய ஒரு போதும் அனுமதிக்கப்படமாட்டாது.
நாட்டில் இருக்கும் வளத்தை நாம் பாதுகாப்பதற்கு தவறினால் அதனால் ஏற்படும் நன்மைகள் இல்லாது போவதுடன் எதிர்காலத்தில் பொருளாதாரத்தில் பின்னடைவை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும்.
சுற்றுலாத் துறையினை மையப்படுத்தி பல்வேறு தொழிற்துறைகள் முன்னெடுக்கப்படுகின்றன. எனினும் நாட்டில் இடம்பெற்ற ஏப்ரல்-21 பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பின்னர் அவை அனைத்தும் வீழ்ச்சியடையும் நிலை ஏற்பட்டது. எமது ஆட்சியின் ஊடாக சுற்றுலாத்துறையில் 10 பில்லியன் டொலர்களை வருமானமாக ஈட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு எம்மால் செய்யக்கூடிய வேலைத்திட்டங்களையே நாம் தற்போது முன்வைத்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.