LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, October 24, 2019

பிரான்ஸ் அரும்பொருகாட்சியகத்தினுள் நுழைந்த மர்ம நபர் – அரபி மொழியில் அச்சுறுத்தல்!

பிரான்சில் உள்ள அரும்பொருட் காட்சியகத்திற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அரபி மொழியில் அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான வாசகங்களை சுவர்களில் எழுதியமை அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலோர பகுதியொன்றில் உள்ள செயின்ட் ரப்ஃபேல் நகரில் தொல்பொருள் அருங்காட்சியகத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வரலாற்று நினைவுச் சின்னமாக விளங்கும் குறித்த அரும்பொருட் காட்சியகத்தில் மெடிவல் கற்களால் (இடைக்கால கற்கள்) நிர்மாணிக்கப்பட்ட தேவாலயம் மற்றும் ரோமானிய வரலாற்றில் பயன்படுத்தப்பட்ட ஏராளமான ஆம்போராக்கள் (பழங்கால கூசாக்கள்) மற்றும் அரியவகை பொருட்கள் உள்ளன.

இந்த அருங்காட்சியகத்திற்குள் நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நுழைந்தமை அங்கு தீவிரநிலைமையை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த மர்மநபர் அரும்பொருட் காட்சியகத்தின் சுவர்களில் அரபு மொழியில் அச்சுறுத்தல் விடுக்கும் தொனியில் வாசகங்களை எழுதியுள்ளமை தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் அருங்காட்சியகத்தை சுற்றி வளைத்தனர். ஆனால் உள்ளே இருந்த அடையாளம் தெரியாத நபர் பொலிஸாருடன் தொடர்பு கொள்ள மறுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அடையாளம் தெரியாத நபரிடம் ஆயுதங்கள் எதுவும் இருந்ததா? உள்ளே வேறு யாரும் இருந்தார்களா என்பது குறித்து பொலிஸார் தகவல்கள் எதுவும் தெரிவிக்கவில்லை.

அரபி மொழியில் எழுதப்பட்ட வாசகங்களில் ஒன்றில் ‘இந்த அருங்காட்சியகம் நரகமாக மாறப்போகிறது’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பகுதியிலுள்ள மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அடையாளம் நபர் ஒருவர் அரும்பொருட்காட்சியகத்திற்குள் நுழைந்து அச்சுறுத்தலான வாசகங்களை எழுதியுள்ளமை பிரான்சில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7