தொடர்பாக இலங்கை சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
இந்த அறிவிப்பு ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்படவிருந்தது, ஆனால் அது நேற்று திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டபோதும் அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில் இன்று கருத்து தெரிவித்த அவர் நாளை நிச்சயமாக அறிவிக்கப்படும் என கூறினார்.
முன்னதாக சுதந்திர கட்சியின் மத்திய குழு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஜனாதிபதி தேர்தலில் கட்சி எடுக்க வேண்டிய நிலைப்பாட்டை முடிவு செய்வதற்கான முழு அதிகாரத்தையும் வழங்க முடிவு செய்திருந்தது.
இந்த மத்தியகுழு கூட்டத்தின்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கலாமா அல்லது தனித்தனியாக போட்டியிடலாமா என கலந்துரையாடப்பட்டது.
இருப்பினும், நேற்று வேட்பு மனுத் தாக்கலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடைந்தது, ஆனால் சுதந்திர கட்சி வேட்பு மனுதாக்கல் செய்யவில்லை.
இலங்கை சோஷலிச குடியரசின் கடந்த 7 தேர்தல்களிலும் போட்டியிட்ட சுதந்திர கட்சி, இந்த தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாயவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்க தீர்மானித்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.