அற்புதமான மற்றும் கடினமான போராட்டத்திற்கு பின்னர் கிடைத்த வெற்றிக்கு ஜஸ்டின் ட்ரூடோவுக்கு வாழ்த்துக்கள்.
இரு நாடுகளையும் முன்னேற்றப்பாதையில் கொண்டுசெல்வதற்கு உங்களுடன் இணைந்து பணியாற்ற நான் தயாராக இருக்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
கனடாவில் பொதுத் தேர்தல் நடைபெற்ற நிலையில், அதன் முடிவுகள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன. இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஆளும் கட்சியான லிபரல் கட்சி முன்னிலை வகிக்கிறது.
இரு பிரதான கட்சிகளுக்கு இடையில் பலத்த போட்டி நிலவும் என எதிர்பார்கப்பட்ட நிலையில், ஆளும் கட்சியான லிபரல் முன்னிலை வகிக்கிறது.
லிபரல் கட்சி 150 ஆசனங்களையும் கொன்சவேர்றிவ் கட்சி 117 ஆசனங்களையும் பிளாக் கியூபாகோயிஸ் 35 ஆசனங்களையும் இதுவரையில் பெற்றுள்ளன. இருப்பினும் 170 ஆசனங்களை பெறும் கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.