இந்த விடயம் தொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ஷ, “அரசாங்கம் கடந்த 5 ஆன்டுகளாக தமிழ் மக்களுக்கு எதனையும் செய்யவில்லை.
இந்நிலையில் சஜித் பிரேமதாசாவுக்கு அவர்கள் ஆதரவு வழங்குவார்கள் என்றால், அதன் பின்னணியில் நிதி ரீதியான ஊக்குவிப்பு இருக்கலாம்” எனவும் நாமல் ராஜபக்ஷ பதிவிட்டுள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் எவருக்கு ஆதரவு என தமிழ் தேசிய கூட்டமைப்பு இதுவரை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
குறிப்பாக அண்மையில் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட 5 தமிழ் கட்சிகளும் இணைந்து பிரதான வேட்பாளர்களுடன் கலந்துரையாடிய பின்னரே தீர்மானம் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாமல் ராஜபக்ஷ இவ்வாறு கூறியுள்ளார்.