சுகயீனம் காரணமாக நான்கு நாட்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) காலமாகியுள்ளார்.
இவர் முன்னர் தொல்லியல் ஆய்வாளராக கடமையாற்றியிருந்தார்.
ஏப்ரல் 2004 நாடாளுமன்றத் தேர்தலில் தங்கேஸ்வரி தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தார்.
2010ஆம் ஆண்டு தேர்தலில் இவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் வேட்பாளராகத் தெரிவு செய்யப்படாததால், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் 2010தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.
இவர் தனது அரசியல் வாழ்வில் அதிகளவிலான சமூக பணிகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.