அத்தோடு அடுத்து ஏற்படும் மாற்றம் நாட்டிற்கு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் என தேர்தல் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போது அநுர குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நோக்கத்திலேயே மக்கள் ஒவ்வொரு தேர்தலிலும் புதிய ஆட்சி ஒன்றினை உருவாகக் முயற்சிக்கின்றனர். ஆனால் மக்கள் ஒவ்வொரு தடவையும் ஆட்சியை மாற்றிய போதும் மாற்றத்தின் பலன் கிடைக்கவில்லை.
இப்போது ஏற்படும் மாற்றம் நாட்டிற்கு ஆரோக்கியமான மாற்றமாக இருக்க வேண்டும். அதற்காகவே தேசிய மக்கள் சக்திக்கான மாற்றமாக அதனை மாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
பிரதான இரண்டு வேட்பாளர்களும் இதுவரை கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளனர். இனியும் இவர்களின் வாக்குறுதிகளை நம்பினால் மக்களே விளைவுகளை சந்திக்க நேரிடும்.
ஆகவே மாற்றம் ஒன்றினை உருவாக்குவோம். அது எம்மை நாம் ஆளும் ஜனநாயக மாற்றமாக இருக்க வேண்டும். அதற்காக எம்முடன் மக்கள் கைகோர்க்க முன்வாருங்கள்” என அவர் கூறினார்.