ஆழ்துளைக் கிணற்றில் தவறி வீழ்ந்த குழந்தை சுர்ஜித், 100 அடி ஆழத்திற்கு சென்றுள்ள நிலையில் குழந்தையின் கை, மேலே தெரியும் கண்காணிப்பு கமெரா பதிவு தற்போது வெளியாகியுள்ளது.
இதன்மூலம் குழந்தையை எப்படியாவது மீட்டுவிட முடியும் என்ற புது நம்பிக்கையும் பிறந்துள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தது. ஆழ்துளைக் கிணற்றில் நேற்று மாலை 5.40 மணிக்கு விழுந்த குழந்தை முதலில் 26 அடியில் சிக்கியது.
பின்னர் 70 அடி ஆழத்திற்குச் சென்ற குழந்தை, தற்போது குழந்தை மேலும் இறங்கி 100அடி ஆழத்திற்குச் சென்றுவிட்ட நிலையில் 26 மணி நேரங்களுக்கும் மேலாக மீட்புப் பணிக்ள தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.