கொலை செய்யப்பட்டவரின் மூத்த சகோதரியின் கணவரும் அவரது தந்தையும் தமது சட்டத்தரணி ஊடாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இன்று காலை சரணடைந்தனர்.
அவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் இன்று மாலை முற்படுத்தப்பட்டனர்.
இந்தக் கொலை தொடர்பான இறப்பு விசாரணை நாளை யாழ்ப்பாணம் நீதிமன்றில் இடம்பெறவுள்ளதால் சந்தேகநபர்கள் இருவரையும் நாளைவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
யாழ்ப்பாணம், அரியாலை – மணியம் தோட்டம் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை (ஒக்.15) மாலை இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றது.
சம்பவத்தில் மணியந்தோட்டம் 5ஆம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த கொன்ஸ்ரன் கலஸ்ரன் (வயது-33) என்பவரே கொலை செய்யட்டார்.
இளைஞளை அவரது மூத்த சகோதரியின் கணவரே கொலை செய்தார். சகோதரியின் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு உண்டு. அந்தப் பெண்ணை தேடிச் சென்ற இளைஞன் தனது சகோதரியின் வாழ்க்கையைப் பாழாக்கவேண்டாம் என்று கண்டித்து வந்துள்ளார்.
இளைஞன் தன்னை மிரட்டியதாக அந்தப் பெண் கொலை செய்தவருக்கு தகவல் வழங்கியது. அதனால் சகோதரியின் கணவரின் தந்தையால் இளைஞனைப் பிடித்து வைத்திருக்க சகோதரியின் கணவர் கோடாரியால் கழுத்தில் கொத்தியதுடன், கண்மூடித்தனமாக இளைஞனைத் தாக்கினார்” என்று பொலிஸார் தெரிவித்தனர்.