விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகளில், இரு தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது.
இந்நிலையில், தஞ்சாவூரில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே டி.டி.வி. தினகரன் இவ்வாறு கூறினார்.
மேலும் இடைத்தேர்தலில் ஆளும்கட்சி ஜெயிக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம் என்றும் இது ஒன்றும் பெரிய வெற்றி இல்லை எனவும் தெரிவித்தார்.
ஏனென்றால், 2006-2011 வரை நடைபெற்ற அனைத்து இடைத்தேர்தல்களிலும் தி.மு.க. வெற்றி பெற்றது என்றும் 2011-க்குப் பின்னர் அந்த நிலைமை மாறியது என்றும் தினகரன் தெரிவித்தார்.
மேலும் அ.தி.மு.க.வுடன் அ.ம.மு.க. இணையுமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அ.ம.மு.க. ஒருபோதும் துரோகிகளுடன் இணையாது எனத் தெரிவித்தார்.