ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கல்வி மேலதிக செயலாளர் விமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
இதற்காக சமீபத்தில் நடத்தப்பட்டிருந்த போட்டிப் பரீட்சையில் ஆகக்கூடுதலான புள்ளிகளைப் பெற்ற 547 பட்டதாரிகளில் இருந்து 205 பேருக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுவருகின்றன.
மேலும் இந்த பயிற்சி எதிர்வரும் 16 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
இந்த பயிற்சியை பூர்த்தி செய்த பட்டதாரிகள் மேல் மாகாண பாடசாலைகளில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். அதேநேரம் எஞ்சிய பட்டதாரிகளுக்கான பயிற்சிகள் இம் மாதம் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.