துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரை, பிரிட்டிஷ் கொலம்பியா பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இந்தக் கைது நடவடிக்கையின்போது சந்தேகநபரொருவர் காயமடைந்ததாகவும், பொலிஸார் எவரும் காயமடையவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண் சந்தேகநபர்களான இவர்கள், வான்கூவரில் கண்காணிக்கப்பட்டதாகவும், வான்கூவர் பொலிஸ் அதிகாரிகளின் உதவியுடன் இவர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் இப்போது காவலில் வைக்கப்பட்டிருந்தாலும், எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் அவர்கள்மீது சுமத்தப்படவில்லை.
வெர்மொன்ற் ட்ரைவ் பகுதியில் புதன்கிழமை அதிகாலை 2:30 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஆணொருவர் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்தச் சம்பவத்தினால் பொதுமக்களுக்கு ஆபத்து இல்லை எனத் தெரிவித்துள்ள பொலிஸார், இதுகுறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.