இந்த சம்பவம் இன்று (சனிக்கிழமை) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், மினுவங்கொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து பொலிஸாரும் தீயணைப்பு படையினரும் இணைத்து தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்ததாக மினுவங்கொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
தொழிற்சாலையில் கொப்பரா உலர்த்தும் பகுதியில் ஏற்பட்ட வெப்ப அதிகரிப்பின் காரணமாகவே இந்த தீ ஏற்பட்டுள்ளது. இதன்போது 50 ஊழியர்கள் வரையில் கடமையில் ஈடுப்பட்டிருந்தனர். இவ்விபத்தினால் எவருக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கவில்லை.
தீ விபத்தின் போது தொழிற்சாலையின் இரு கட்டடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.