ஜப்பானில் 10 நாட்களுக்கு முன்னர் ஹபிகிஸ் புயல் தாக்கியதைத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள இடங்களில் உள்ள சுமார் 80 ஆயிரம் பேரை வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள இடங்களில் மீட்புப் பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக ஜப்பானில் வரலாறு காணாத பாதிப்பை ஹபிகிஸ் புயல் விட்டுச் சென்றது. இப்புயல் காரணமாக ஜப்பானின் கிழக்குப் பகுதி மிகுந்த பாதிப்புக்குள்ளாகியது.
சுமார் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் புயல் காரணமாக பாதிக்கப்பட்டதோடு, இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.