இதனால் அந்நாட்டு ஆயிரக்கணக்கான விமான சேவைகளும், ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்றிரவு நரிடா சர்வதேச விமான நிலையத்ததை நோக்கிச் செல்லவிருந்த ஸ்ரீ லங்கன் விமானம் தாமதித்தே செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்று இரவு 7.15 மணியளவில் ஜப்பான்-நரிடா செல்லவிருந்த ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் 460 விமானம் நாளை அதிகாலை 2.35 மணிக்கு புறப்படவுள்ளதாக ஸ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலதிக தகவல்களை 109411777 19 79 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜப்பானின் டோக்கியோவில் காற்று மணிக்கு 180 கி.மீ வேகத்தில் வீசிவருவதனால் மழை வீழ்ச்சி மற்றும் நிலச்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக ஜப்பான் வானியல் ஆய்வு நிலையம் எச்சரித்துள்ளது.